Sriman Narayaneeyam - Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம் (ச்லோகம் 853)

Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம்

தால ப்ரமாண சரணாமகிலம் தஹந்தீம் க்ருத்யாம் விலோக்ய சகிதை: கதிதோSபி பௌரை: த்யூதோத்ஸவே கிமபி நோ சலிதோ விபோ த்வம் பார்ச்வஸ்தமாசு விஸஸர்ஜித காலசக்ரம் தால ப்ரமாண சரணாம் அகிலம் தஹந்தீம் க்ருத்யாம் விலோக்ய சகிதை: கதித: அபி பௌரை: த்யூத உத்ஸவே கிம் அபி நோ சலித: விபோ த்வம் பார்ச்வஸ்தம் ஆசு விஸஸர்ஜித கால சக்ரம் तालप्रमाणचरणामखिलं दहन्तीं कृत्यां विलोक्य चकितैः कथितोऽपि पौरैः । द्यूतोत्सवे किमपि नो चलितो विभो त्वं पार्श्वस्थमाशु विससर्जिथ कालचक्रम्

எங்கும் உள்ளவனே! குருவாயூரப்பா! அந்த அபிசார தேவதையானது, பனைமரம் அளவிற்கு உயரமான கால்களை உடையதாகவும், அனைத்தையும் எரிப்பது போன்றும் இருந்தது. அதனைக் கண்டு அஞ்சிய மக்கள் உன்னிடம் வந்து இந்தச் செய்தியைக் கூறினார்கள். பகடை விளையாடிக் கொண்டிருந்த நீ இதனைக் கேட்டு சிறிதும் நகரவில்லை. உனது ஸுதர்ஸன சக்கரத்தை மட்டுமே விடுத்தாய்.