Sriman Narayaneeyam - Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம் (ச்லோகம் 851)

Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம்

ஜாட்யேந பாலககிராSபி கிலாஹமேவ ஸ்ரீவாஸுதேவ இதி ரூட மதிச்சிரம் ஸ: ஸாயுஜ்யமேவ பவதைக்யதியா கதோSபூத் கோ நாம கஸ்ய ஸுக்ருதம் கதமித்யவேயாத் ஜாட்யேந பாலக கிரா அபி கில அஹம் ஏவ ஸ்ரீவாஸுதேவ இதி ரூடமதி: சிரம் ஸ: ஸாயுஜ்யம் ஏவ பவத் ஐக்ய தியா கத: அபூத் க: நாம கஸ்ய ஸுக்ருதம் கதம் இதி அவேயாத் जाड्येन बालकगिराऽपि किलाहमेव श्रीवासुदेव इति रूढमतिश्चिरं सः । सायुज्यमेव भवदैक्यधिया गतोऽभूत् को नाम कस्य सुकृतं कथमित्यवेयात्

குருவாயூரப்பா! அந்தப் பௌண்ட்ரகன் தனது அறியாமையால் சிறு பிள்ளைத்தனமாக, தானே வாஸுதேவன் என்று எண்ணி வந்தான் அல்லவா? உன்னுடன் இப்படியாகச் சிந்தனையில் ஒன்றியதால் அவன் மோக்ஷம் பெற்றான். உன்னிடம் ஐக்கியமானான். யாருடைய புண்ணியத்தை யாரால் எப்படி உணர முடியும்?