Sriman Narayaneeyam - Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம் (ச்லோகம் 850)

Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம்

காலாயஸம் நிஜ ஸுதர்சநமஸ்யதோSஸ்ய காலாநலோத்கர கிரேண ஸுதர்சநேந சீர்ஷம் சகர்தித மமர்தித சாஸ்ய ஸேநாம் தத் மித்ர காசிப சிரோSபி சகர்த்த காச்யாம் கால ஆயஸம் நிஜ ஸுதர்சநம் அஸ்யத: அஸ்ய கால அநல உத்கர கிரேண ஸுதர்சநேந சீர்ஷம் சகர்தித மமர்தித ச அஸ்ய ஸேநாம் தத் மித்ர காசிப சிர: அபி சகர்த்த காச்யாம் कालायसं निजसुदर्शनमस्यतोऽस्य कालानलोत्करकिरेण सुदर्शनेन । शीर्षं चकर्तिथ ममर्दिथ चास्य सेनां तन्मित्रकाशिपशिरोऽपि चकर्थ काश्याम्

குருவாயூரப்பா! அவன் கருமையான இரும்பினால் செய்த சக்கரம் ஒன்றை ஸுதர்ஸனம் என்று கூறியபடி உன் மீது தொடுத்தான். ஆனால் உனது உண்மையான ஸுதர்ஸனமோ தீப்பிழம்புகளைக் கக்கியபடி சென்று அவன் தலையை அறுத்தது. அவனது படைகளையும் நீ அழித்தாய். அவனுக்கு உதவிய அவன் நண்பனான காசி மன்னனின் தலையை அறுத்து, அந்தத் தலையானது, காசியில் விழும்படி செய்தாய்.