Sriman Narayaneeyam - Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம் (ச்லோகம் 849)
Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம்
தூதேSத யாதவதி யாதவ ஸைநிகைஸ்த்வம் யாதோ ததர்சித வபு: கில பௌண்ட்ரகீயம் தாபேந வக்ஷஸி க்ருதாங்கமநல்ப மூல்ய ஸ்ரீகௌஸ்துப மகர குண்டல பீத சேலம் தூதே அத யாதவதி யாதவ ஸைநிகை: த்வம் யாத: ததர்சித வபு: கில பௌண்ட்ரகீயம் தாபேந வக்ஷஸி க்ருத அங்கம் அநல்ப மூல்ய ஸ்ரீகௌஸ்துப மகர குண்டல பீத சேலம் दूतेऽथ यातवति यादवसैनिकस्त्वं यातो ददर्शिथ वपुः किल पौण्ड्रकीयम् । तापेन वक्षसि कृताङ्कमनल्पमूल्य - श्रीकौस्तुभं मकरकुण्डलपीतचेलम्
குருவாயூரப்பா! அந்தத் தூதன் சென்ற பின்னர் நீ உனது யாதவப் படைகளுடன் பௌவுண்ட்ரகனின் இடத்தை அடைந்தாய். ஸ்ரீவத்ஸம் என்ற மச்சம் போன்று போலியாகத் தனது மார்பில் சூடு வைத்தத் தழும்பு ஏறியும், கௌஸ்துபம் என்பதாகத் தனது மார்பில் போலியான ஒரு இரத்தினத்தை வைத்துக் கொண்டும், காதுகளில் மகர குண்டலங்களோடும், இடுப்பில் மஞ்சள் பட்டுடனும் இப்படியாக இருந்த அவனை நீ கண்டாயாமே!