Sriman Narayaneeyam - Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம் (ச்லோகம் 848)

Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம்

நாராயணோSஹமவதீர்ண இஹாஸ்மி பூமௌ தத்ஸே கில த்வமபி மாமக லக்ஷணாநி உத்ஸ்ருஜ்ய தாநி சரணம் வ்ரஜ மாமிதி த்வாம் தூதோ ஜகாத ஸகலைர்ஹஸித: ஸபாயாம் நாராயண: அஹம் அவதீர்ண இஹ அஸ்மி பூமௌ தத்ஸே கில த்வம் அபி மாமக லக்ஷணாநி உத்ஸ்ருஜ்ய தாநி சரணம் வ்ரஜ மாம் இதி த்வாம் தூத: ஜகாத ஸகலை: ஹஸித: ஸபாயாம் नारायणोऽहमवतीर्ण इहास्मि भूमौ धत्से किल त्वमपि मामकलक्षणानि । उत्सृज्य तानि शरणं व्रज मामिति त्वां दूतो जगाद सकलैर्हसितः सभायाम्

குருவாயூரப்பா! அந்த தூதன் உன்னிடம் வந்து பௌவுண்ட்ரகன் கூறியதாக, “நாராயணனாகிய நான் இந்தப் பூமியில் பௌவுண்ட்ரக வாஸுதேவனாக அவதாரம் செய்துள்ளேன். நீயும் உன்னை நாராயணனின் அவதாரம் என்று கூறிக் கொண்டு என்னுடைய அடையாளங்களை அணிந்துள்ளாய். அவற்றை துறந்து விட்டு என்னிடம் சரண் புகுந்து விடு”, என்றான். இதனைக் கேட்டு சபையில் உள்ள அனைவரும் சிரித்தனர்.