Sriman Narayaneeyam - Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம் (ச்லோகம் 847)
Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம்
ராமேSத கோகுல கதே ப்ரமதா ப்ரஸக்தே ஹூதாநுபேத யமுநா தமநே மதாந்தே ஸ்வைரம் ஸமாரமதி ஸேவக வாத மூடோ தூதம் ந்யயுங்க்த தவ பௌண்ட்ரக வாஸுதேவ: ராமே அத கோகுல கதே ப்ரமதா ப்ரஸக்தே ஹூத அநுபேத யமுநா தமநே மத அந்தே ஸ்வைரம் ஸமாரமதி ஸேவக வாத மூட: தூதம் ந்யயுங்க்த தவ பௌண்ட்ரக வாஸுதேவ: रामेऽथ गोकुलगते प्रमदाप्रसक्ते हूतानुपेतयमुनादमने मदान्धे । स्वैरं समारमति सेवकवादमूढो दूतं न्ययुङ्क्त तव पौण्ड्रकवासुदेवः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒருமுறை பலராமனுக்கு கோகுலத்தில் ஆயர் பெண்களிடம் களிப்புடன் இருக்கத் தோன்றியது. இதனால் மயக்கத்துடன் இருந்தார். தான் அழைத்தபோது தன்னிடம் வர மறுத்த யமுனை நதியை தனது கலப்பையால் அடக்கினார். அந்த நாட்களில், பௌவுண்ட்ரக வாஸுதேவன் என்பவன் தனது வேலைக்காரர்கள் பேச்சில் மயங்கி, உன்னிடம் ஒரு தூதனை அனுப்பினான்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-65 மற்றும் x-68 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.