Sriman Narayaneeyam - Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம் (ச்லோகம் 845)

Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம்

முஹுஸ்தாவச்சக்ரம் வருணாமஜயோ நந்தஹரணே யமம் பாலாநீதௌ தவ தஹநபாநேSநில ஸகம் விதிம் வத்ஸஸ்தேயே கிரிசமிஹ பாணஸ்ய ஸமரே விபோ விச்வோத்கர்ஷீ ததயமவதாரோ ஜயதி தே முஹு: தாவத் சக்ரம் வருணாம் அஜய: நந்த ஹரணே யமம் பால ஆநீதௌ தவ தஹந பாநே அநில ஸகம் விதிம் வத்ஸ ஸ்தேயே கிரிசம் இஹ பாணஸ்ய ஸமரே விபோ விச்வ உத்கர்ஷீ தத் அயம் அவதார: ஜயதி தே मुहुस्तावच्छक्रं वरुणमजयो नन्दहरणे यमं बालानीतौ दवदहनपानेऽनिलसखम् । विधिं वत्सस्तेये गिरिशमिह बाणस्य समरे विभो विश्वोत्कर्षी तदयमवतारो जयति ते

எங்கும் உள்ளவனே! குருவாயூரப்பா! நீ இந்திரனை பலமுறை வென்றாய்; நந்தகோபரை வருணன் கவர்ந்து சென்றபோது அவனை அடக்கினாய்; ஸாந்தீபநி முனிவரின் மகனை மீட்டபோது யமனை வென்றாய்; காட்டில் உண்டான நெருப்பை உண்டபோது அக்னி தேவனை வென்றாய்; நான்முகன் கன்றுகளையும் சிறுவர்களையும் மறைத்தபோது அவனை வென்றாய்; இப்போது பாணாசுர யுத்தத்தில் பரமசிவனையும் வென்றாய். க்ருஷ்ணா! பகவானே! குருவாயூரப்பா! இதனால்தான் உனது இந்த க்ருஷ்ணாவதாரம் மற்ற அவதாரங்களிலும் மேன்மை உடையதாக உள்ளது.