Sriman Narayaneeyam - Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம் (ச்லோகம் 844)
Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம்
பாணம் நாநாயுதோக்ரம் புந: அபிபதிதம் தர்பதோஷாத் விதந்வந் நிர்லூநாசேஷ தோஷாம் ஸபதி புபுதுஷா சங்கரேணோபகீத: தத் வாசா சிஷ்ட பாஹு த்விதயம் உபயதோ நிர்பயம் தத் ப்ரியம் தம் முக்த்வா தத் தத்தமாநோ நிஜபுரம் அகம: ஸாநிருத்த: ஸஹோஷ: பாணம் நாநா ஆயுத உக்ரம் புந: அபிபதிதம் தர்ப தோஷாத் விதந்வந் நிர்லூந அசேஷ தோஷாம் ஸபதி புபுதுஷா சங்கரேண உபகீத: தத் வாசா சிஷ்ட பாஹு த்விதயம் உபயத: நிர்பயம் தத் ப்ரியம் தம் முக்த்வா தத் தத்த மாந: நிஜ புரம் அகம: ஸாநிருத்த: ஸஹோஷ: बाणं नानायुधोग्रं पुनरभिपतितं दुर्पदोषाद्वितन्वन् निर्लूनाशेषदोषं सपदि बुबुधुषा शङ्करेणोपगीतः । तद्वाचा शिष्टबाहुद्वितयमुभयतो निर्भयं तत्प्रियं तं मुक्त्वा तद्दत्तमानो निजपुरमगमः सानिरुद्धः सहोषः
குருவாயூரப்பா! மறுபடியும் பலவகையான கொடிய ஆயுதங்கள் ஏந்தியவனாகவும் கர்வம் உடையவனாகவும் பாணாசுரன் உன்னுடன் போர் புரிய வந்தான். நீ அவனது ஆயிரம் கைகளையும் வெட்டி எறிந்தாய். இதன் மூலம் அவனது பாவங்களும் தொலைந்தன. தனது பக்தனின் தோஷங்கள் யாவும் நீங்கியதை உணர்ந்த சிவன் உன்னை வணங்கினார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க, பாணாசுரன் உன்னை வணங்க இரண்டு கைகளை மட்டும் உடையவனாகச் செய்தாய். அவனை விடுதலை செய்தாய். அவன் உனக்கு பல மரியாதைகள் செய்தான். பின்னர் நீ அநிருத்தனோடும், உஷாவோடும் துவாரகை சென்றாய்.