Sriman Narayaneeyam - Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம் (ச்லோகம் 843)

Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம்

சாபாநாம் பஞ்சசத்யா ப்ரஸபம் உபகதே சிந்நசாபேSத பாணே வ்யர்த்தே யாதே ஸமேதோ ஜ்வரபதி: அசநைரஜ்வரி த்வஜ்ஜ்வரேண ஜ்ஞாநீ ஸ்துத்வாSத தத்வா தவ சரித ஜுஷாம் விஜ்வரம் ஸ ஜ்வரோSகாத் ப்ராயோSந்தர் ஜ்ஞாநவந்தோSபி ச பஹு தமஸா ரௌத்ரசேஷ்டா ஹி ரௌத்ரா: சாபாநாம் பஞ்சசத்யா ப்ரஸபம் உபகதே சிந்ந சாபே அத பாணே வ்யர்த்தே யாதே ஸமேத: ஜ்வரபதி: அசநை: அஜ்வரி த்வத் ஜ்வரேண ஜ்ஞாநீ ஸ்துத்வா அத தத்வா தவ சரித ஜுஷாம் விஜ்வரம் ஸ ஜ்வர: அகாத் ப்ராய: அந்த: ஜ்ஞாநவந்த: அபி ச பஹு தமஸா ரௌத்ர சேஷ்டா ஹி ரௌத்ரா: चापानां पञ्चशत्या प्रसभमुपगते छिन्नचापेऽथ बाणे व्यर्थे याते समेतो ज्वरपतिरशनैरज्वरि त्वज्ज्वरेण । ज्ञानी स्तुत्वाऽथ दत्त्वा तव चरितजुषां विज्वरं सज्वरोऽगात् प्रायोऽन्तर्ज्ञानवन्तोऽपि च बहुतमसा रौद्रचेष्टा हि रौद्राः

குருவாயூரப்பா! அதன் பின்னர் பாணாசுரன் ஐந்நூறு விற்களோடு உன்னுடன் போர் புரிய வந்தான். அவனுடைய விற்கள் அனைத்தும் முறிந்தவுடன், அவன் ஓடிவிட்டான். அப்போது சைவ ஜ்வரத்தின் தலைவன் உன்னை எதிர்த்தான். ஆனால் அவன் உனது வைணவ ஜ்வரத்தினால் விரட்டியடிக்கப்பட்டான். மிகுந்த ஞானம் உடைய அவன் ஓடும்போது, “க்ருஷ்ணா! உனது மஹிமைகளைக் கூறுபவர்களுக்கு ஜ்வரத்தின் வேதனைகளே இருக்காது”, என்று வரம் கொடுத்தனர். சிவனைக் சார்ந்தவர்கள் மிகுந்த ஞானம் உள்ளவர்களாக இருந்தாலும், தங்கள் தமோ குணம் காரணமாக, கொடுமையான செயல்களையே செய்பவர்கள் போன்று உள்ளதே!