Sriman Narayaneeyam - Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம் (ச்லோகம் 842)
Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம்
நிருத்தாசேஷாஸ்த்ரே முமுஷி தவாஸ்த்ரேண கிரிசே த்ருதா பூதா பீதா: ப்ரமத குலவீரா: ப்ரமயிதா: பராஸ்கந்தத் ஸ்கந்த: குஸும சர பாணைச்ச ஸசிவ: ஸ கும்பாண்டோ பாண்டம் நவமிவ பலேநாசு பிபிதே நிருத்த அசேஷ அஸ்த்ரே முமுஷி தவ அஸ்த்ரேண கிரிசே த்ருதா பூதா பீதா: ப்ரமத குல வீரா: ப்ரமயிதா: பராஸ்கந்தத் ஸ்கந்த: குஸும சர பாணை: ச ஸசிவ: ஸ கும்பாண்ட: பாண்டம் நவம் இவ பலேந ஆசு பிபிதே निरुद्धाशेषास्त्रे मुमुहुषि तवास्त्रेण गिरिशे द्रुता भूता भीताः प्रमथकुलवीराः प्रमथिताः । परास्कन्दत् स्कन्दः कुसुमशरबाणैश्च सचिवः स कुम्भाण्डो भाण्डं नवमिव बलेनाशु बिभिदे
குருவாயூரப்பா! பரமசிவன் உன் மீது எய்த அனைத்து அஸ்திரங்களையும் நீ சுலபமாக உனது அஸ்திரங்களால் தடுத்தாய். மேலும் சிவனையும் மயக்கமுற்று விழும்படி செய்தாய். இதனைக் கண்ட பூதகணங்கள் பயந்து ஓடிவிட்டன. பூதகணங்களின் தலைமை சேனாதிபதிகள் மிகவும் துன்பம் அடைந்தனர். தனது மன்மத பாணங்கள் மூலம் முருகனைப் ப்ரத்யும்னன் புறமுதுகு காண்பித்து ஓட வைத்தான். பாணாசுரனின் மந்திரியான கும்பாண்டன் என்பவனை ஒரு பாண்டத்தை உடைப்பது போல் பலராமன் கொன்றான்.