Sriman Narayaneeyam - Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம் (ச்லோகம் 840)
Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம்
கந்யாபுரே தயிதயா ஸுகமாரமந்தம் சைநம் கதஞ்சந பபந்துஷி சர்வபந்தௌ ஸ்ரீநாரதோக்த ததுதந்த துரந்தரோஷை: த்வம் தஸ்ய சோணிதபுரம் யதுபிர்ந்யருந்தா: கந்யா புரே தயிதயா ஸுகம் ஆரமந்தம் ச ஏநம் கதஞ்சந பபந்துஷி சர்வபந்தௌ ஸ்ரீநாரத உக்த தத் உதந்த துரந்த ரோஷை: த்வம் தஸ்ய சோணிதபுரம் யதுபி: ந்யருந்தா: कन्यापुरे दयितया सुखमारमन्तं चैनं कथञ्चन बबन्धुषि शर्वबन्धौ । श्रीनारदोक्ततदुदन्तदुरन्तरोषैस्त्वं तस्य शोणितपुरं यदुभिर्न्यरुन्धाः
குருவாயூரப்பா! அநிருத்தன், உஷாவுடன் அவளது அந்தப்புரத்தில் இன்பமாக இருந்தபோது, சிவபக்தனான பாணாசுரன் என்பவன் அவனைக் கட்டிப்போட்டு சிறை வைத்தான். இதனை நீ நாரதர் மூலமாக அறிந்தாய். உடனே நீ யாதவர்களுடன் கிளம்பி சோணிதபுரம் சென்று அந்த நகரை அழிக்கத் தொடங்கினாய்.