Sriman Narayaneeyam - Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம் (ச்லோகம் 839)

Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம்

யோகிந்யதீவ குசலா கலு சித்ரலேகா தஸ்யா: ஸகீ விலிகதீ தருணாநசேஷாந் தத்ராநிருத்தமுஷயா விதிதம் நிசாயாம் ஆநேஷ்ட யோக பலதோ பவதோ நிகேதாத் யோகிநீ அதீவ குசலா கலு சித்ரலேகா தஸ்யா: ஸகீ விலிகதீ தருணாந் அசேஷாந் தத்ர அநிருத்தம் உஷயா விதிதம் நிசாயாம் ஆநேஷ்ட யோக பலத: பவத: நிகேதாத் योगिन्यतीव कुशला खलु चित्रलेखा तस्याः सखी विलिखती तरुणानशेषान् । तत्रानिरुद्धमुषया विदितं निशाया - मानेष्ट योगबलतो भवतो निकेतात्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த உஷாவிற்கு, சித்ரலேகா என்ற தோழி இருந்தாள். அவள் யோக சக்தியையும், நுட்பமான திறமைகளையும் கொண்டிருந்தாள். பல இளைஞர்களின் படங்களை வரைந்து உஷாவிற்குக் காண்பித்தாள். அப்படி வரையும்போது அவள் வரைந்திருந்த அநிருத்தனைக் கண்ட உஷா, சித்ரலேகாவிடம் விவரத்தைக் கூறினாள். உடனே சித்ரலேகா தனது யோகத்தின் மூலம் உனது மாளிகையில் இருந்த அநிருத்தனைக் கவர்ந்து சென்றாளாமே!