Sriman Narayaneeyam - Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம் (ச்லோகம் 838)

Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம்

பாணஸ்ய ஸா பலி ஸுதஸ்ய ஸஹஸ்ர பாஹோ: மாஹேச்வரஸ்ய மஹிதா துஹிதா கிலோஷா த்வத் பௌத்ரமேநமநிருத்தமத்ருஷ்ட பூர்வம் ஸ்வப்நேSநுபூய பகவந் விரஹாதுராSபூத் பாணஸ்ய ஸா பலி ஸுதஸ்ய ஸஹஸ்ர பாஹோ: மாஹேச்வரஸ்ய மஹிதா துஹிதா கில உஷா த்வத் பௌத்ரம் ஏநம் அநிருத்தம் அத்ருஷ்ட பூர்வம் ஸ்வப்நே அநுபூய பகவந் விரஹ ஆதுரா அபூத் बाणस्य सा बलिसुतस्य सहस्रबाहोर्माहेश्वरस्य महिता दुहिता किलोषा । त्वत्पौत्रमेनमनिरुद्धमदृष्टपूर्वं स्वप्नेऽनुभूय भगवन् विरहातुराऽभूत्

பகவானே! குருவாயூரப்பா! பாணாசுரன் என்பவன், மஹாபலியின் பேரனும் சிறந்த சிவ பக்தனும், ஆயிரம் கைகளை உடையவனும் ஆவான். அவனுக்கு உஷா என்ற பெண் இருந்தாள். அவள் உனது பேரனான அநிருத்தனை நேரில் காணாமலே, கனவில் மட்டும் கண்டு, அவன் நினைவில் வாடித் தவித்தாளாமே!