Sriman Narayaneeyam - Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம் (ச்லோகம் 837)
Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம்
ப்ரத்யும்நோ ரௌக்மிணேய: ஸ கலு தவ கலா சம்பரேணாஹ்ருதஸ்தம் ஹத்வா ரத்யா ஸஹாப்தோ நிஜபுரம் அஹரத் ருக்மி கந்யாம் ச கந்யாம் தத் புத்ரோSதாநிருத்தோ குணநிதி: அவஹத் ரோசநாம் ருக்மி பௌத்ரீம் தத்ரோத்வாஹே கதஸ்த்வம் நியவதி முஸலிநா ருக்ம்யபி த்யூத வைராத் ப்ரத்யும்ந: ரௌக்மிணேய: ஸ கலு தவ கலா சம்பரேண ஆஹ்ருத: தம் ஹத்வா ரத்யா ஸஹ ஆப்த: நிஜபுரம் அஹரத் ருக்மி கந்யாம் ச கந்யாம் தத் புத்ர: அத அநிருத்த: குணநிதி: அவஹத் ரோசநாம் ருக்மி பௌத்ரீம் தத்ர உத்வாஹே கத: த்வம் நியவதி முஸலிநா ருக்மீ அபி த்யூத வைராத் प्रद्युम्नो रौक्मिणेयः स खलु तव कला शम्बरेणाहृतस्तं हत्वा रत्या सहाप्तो निजपुरमहरद्रुक्मिकन्यां च धन्याम् । तत्पुत्रोऽथानिरुद्धो गुणनिधिरवहद्रोचनां रुक्मिपौत्रीं तत्रोद्वाहे गतस्त्वं न्यवधि मुसलिना रुक्म्यपि द्यूतवैरात्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது அம்சமாகவே ருக்மணிக்கு ப்ரத்யும்னன் பிறந்தான். அவன் சம்பாசுரனால் கவர்ந்து கொல்லப்பட்டான். ஆனால் அவன் சம்பாசுரனைக் கொன்று, ரதிதேவியுடன் துவாரகை வந்தான். பின்னர் மிகுந்த புண்ணியம் செய்தவளும் ருக்மியின் மகளும் ஆகிய ருக்மவதியை மணந்தான் (ருக்மவதி அவன் மாமன் மகள் ஆவாள்). ப்ரத்யும்னனுக்கு மிகச் சிறந்த மகனாக அநிருத்தன் பிறந்தான். அவன் ருக்மியின் பேத்தியான (ருக்மியின் பிள்ளையின் பெண்) ரோசனையை மணந்தான். அநிருத்தனின் கல்யாணத்திற்கு நீ சென்றாயாமே! அங்கு சூதாட்டத்தில் எழுந்த சண்டையில் பலராமன் ருக்மியைக் கொன்றான் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-61-20 முதல் x-64 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.