Sriman Narayaneeyam - Dasaka 81 - மற்ற திருமணங்கள் (ச்லோகம் 836)

Dasaka 81 - மற்ற திருமணங்கள்

கல்பத்ரும் ஸத்யபாமா பவந புவி ஸ்ருஜந் த்வயஷ்ட ஸாஹஸ்ர யோஷா: ஸ்வீக்ருத்ய ப்ரத்யகாரம் விஹித பஹு வபுர் லீலயந் கேளிபேதை: ஆச்சர்யாந்நாரதாலோகித விவித கதி: தத்ர தத்ராபி கேஹே பூய: ஸர்வாஸு குர்வந் தச தச தநயாந் பாஹி வாதாலயேச கல்ப த்ரும் ஸத்யபாமா பவந புவி ஸ்ருஜந் த்வி அஷ்ட ஸாஹஸ்ர யோஷா: ஸ்வீக்ருத்ய ப்ரதி ஆகாரம் விஹித பஹு வபு: லீலயந் கேளிபேதை: ஆச்சர்யாத் நாரத ஆலோகித விவித கதி: தத்ர தத்ர அபி கேஹே பூய: ஸர்வாஸு குர்வந் தச தச தநயாந் பாஹி வாதாலய ஈச: कल्पद्रुं सत्यभामाभवनभुवि सृजन् द्वयष्टसाहस्रयोषाः स्वीकृत्य प्रत्यगारं विहितबहुवपुर्लालयन् केलिभेदैः । आश्चर्यान्नारदालोकितविविधगतिस्तत्र तत्रापि गेहे भूयः सर्वासु कुर्वन् दश दश तनयान् पाहि वातालयेश

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தக் கற்பக மரத்தை ஸத்யபாமாவின் வீட்டின் பின்புறத்தில் நட்டு வைத்தாய். பின்னர் (நரகனிடம் இருந்து மீட்ட) பதினாயிரம் பெண்களையும் திருமணம் செய்து கொண்டாய். அவர்களைக் தனித்தனியாக வசிக்க வைத்து, நீயும் அத்தனை வடிவங்கள் எடுத்து அவர்களை மகிழ வைத்தாயாமே! “எப்படி ஒரே க்ருஷ்ணன் இத்தனை பேரை மணக்க இயலும்”, என்று நாரதர் வியந்து உன்னைக் காண வந்தார். அவர் உன்னை ஒவ்வொரு வீட்டிலும் அந்தந்த வீட்டில் கடமைகளைச் செய்து கொண்டிருப்பதைக் கண்டு வியந்தாராமே! ஒவ்வொரு மனைவிக்கும் நீ பத்துப் பிள்ளைகள் அளித்தாய். இப்படிப்பட்ட நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்.***