Sriman Narayaneeyam - Dasaka 81 - மற்ற திருமணங்கள் (ச்லோகம் 835)

Dasaka 81 - மற்ற திருமணங்கள்

பௌமாபாஹ்ருத குண்டலம் தததிதேர் தாதும் ப்ரயாதோ திவம் சக்ராத்யைர் மஹித: ஸமம் தயிதயா த்யு ஸ்த்ரீஷு தத்தஹ்ரியா ஹ்ருத்வா கல்பதரும் ருஷாபிபதிதம் ஜித்வேந்த்ரமப்யாகம: தத்து ஸ்ரீமத தோஷ ஈத்ருச இதி வ்யாக்யாதுமேவாக்ருதா: பௌம அபாஹ்ருத குண்டலம் தத் அதிதே: தாதும் ப்ரயாத: திவம் சக்ர ஆத்யை: மஹித: ஸமம் தயிதயா த்யு ஸ்த்ரீஷு தத்த ஹ்ரியா ஹ்ருத்வா கல்பதரும் ருஷா அபிபதிதம் ஜித்வா இந்த்ரம் அப்யாகம: தத் து ஸ்ரீ மத தோஷ ஈத்ருச இதி வ்யாக்யாதும் ஏவ அக்ருதா: भौमापाहृतकुण्डलं तददितेर्दातुं प्रयातो दिवं शक्राद्यैर्महितः समं दयितया द्युस्त्रीषु दत्तह्रिया । हृत्वा कल्पतरुं रुषाभिपतितं जित्वेन्द्रमभ्यागम - स्तत्तु श्रीमददोष ईदृश इति व्याख्यातुमेवाकृथाः

குருவாயூரப்பா! முன்பு ஒருமுறை அதிதியிடம் இருந்து நரகாசுரனால் கவர்ந்து செல்லப்பட்ட குண்டலங்களை மீண்டும் அவளிடமே கொடுக்க நீ விரும்பினாய். ஆகவே, தேவலோகப் பெண்களே வெட்கப்படும் அளவிற்கு அழகுடைய ஸத்யபாமாவுடன் இந்திரலோகம் சென்றாய். உன்னைக் கண்ட இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் துதித்தனர். அங்கிருந்த கற்பக மரம் தனக்கு வேண்டும் என்று ஸத்யபாமா கேட்டதனால் அதனை நீ எடுக்க முயன்றாய். அப்போது இந்திரன் உன்னைத் தடுத்தான். அவனை வென்று நீ துவாரகை திரும்பினாய். செல்வத்தால் உண்டாகும் கர்வம் எத்தகைய இழிவானது என்று உலகிற்கு உணர்த்தவே நீ இந்திரனிடம் நாடகம் ஆடினாய் அல்லவா?