Sriman Narayaneeyam - Dasaka 81 - மற்ற திருமணங்கள் (ச்லோகம் 834)
Dasaka 81 - மற்ற திருமணங்கள்
ஸ்துதோ பூம்யா ராஜ்யம் ஸபதி பக தத்தேSஸ்ய தநயே கஜச்சைகம் தத்வா ப்ரஜிகயித நாகாந்நிஜபுரீம் கலேநாபத்தாநாம் ஸ்வகத மநஸாம் ஷோடச புந: ஸஹஸ்ராணி ஸ்த்ரீணாமபி ச தந ராசிம் ச விபுலம் ஸ்துத: பூம்யா ராஜ்யம் ஸபதி பக தத்தே அஸ்ய தநயே கஜம் ச ஏகம் தத்வா ப்ரஜிகயித நாகாந் நிஜ புரீம் கலேந ஆபத்தாநாம் ஸ்வகத மநஸாம் ஷோடச புந: ஸஹஸ்ராணி ஸ்த்ரீணாம் அபி ச தந ராசிம் ச விபுலம் स्तुतो भूम्या राज्यं सपदि भगदत्तेऽस्य तनये गजं चैकं दत्त्वा प्रजिघायिथ नागान्निजपुरीम् । खलेनाबद्धानां स्वगतमनसां षोडश पुनः सहस्राणि स्त्रीणामपि च धनराशिं च विपुलम्
குருவாயூரப்பா! அப்போது நரகனின் தாயான பூதேவி உன்னைத் துதித்தாள். நீ மகிழ்ந்து நரகனின் மகனான பகதத்தன் என்பவனிடம் நாட்டையும், ஒரு யானையையும் அளித்தாய். பின்னர் மற்ற யானைகள் அனைத்தையும், மிகுந்த செல்வங்களையும், உன் மீது மனதை உடையவர்களும், நரகனால் சிறைப்பட்டிருந்தவர்களும் ஆகிய பதினாயிரம் பெண்களையும் துவாரகைக்குக் கொண்டு சேர்த்தாய்.