Sriman Narayaneeyam - Dasaka 81 - மற்ற திருமணங்கள் (ச்லோகம் 833)
Dasaka 81 - மற்ற திருமணங்கள்
முர: த்வாம் பஞ்சாஸ்யோ ஜலதிவந மத்யாதுதபதத் ஸ சக்ரே சக்ரேண ப்ரதலித சிரா மங்க்ஷு பவதா சதுர்தந்தைர் தந்தாவலபதிபிரிந்தாந ஸமரம் ரதாங்கேந சித்வா நரகமகரோஸ்தீர்ண நரகம் முர: த்வாம் பஞ்ச ஆஸ்ய: ஜலதிவந மத்யாத் உதபதத் ஸ சக்ரே சக்ரேண ப்ரதலித சிரா மங்க்ஷு பவதா சது: தந்தை: தந்தாவலபதிபி: இந்தாந ஸமரம் ரதாங்கேந சித்வா நரகம் அகரோ: தீர்ண நரகம் मुरस्त्वां पञ्चास्यो जलधिवनमध्यादुदपतत् स चक्रे चक्रेण प्रदलितशिरा मङ्क्षु भवता । चतुदन्तैर्दन्तावलपतिभिरिन्धानसमरं रथाङ्केनच्छित्वा नरकमकरोस्तीर्णनरकम्
குருவாயூரப்பா! (அந்த நரகாசுரனுக்கு உதவுவதற்காக) ஐந்து தலைகளை உடைய முரன் என்ற அசுரன் கடலின் நடுவில் இருந்து கிளம்பி உன்னைத் தாக்கினான். உனது சக்ராயுதம் கொண்டு அவன் தலைகளை அறுத்தாய். பின்னர் போர் செய்வதில் மிகுந்த விருப்பம் உடைய நரகன் என்பவன், தனது நான்கு தந்தங்களை உடைய யானைப் படையுடன் உன்னை எதிர்த்தான். நீண்ட நேர போருக்குப் பிறகு ஸுதர்ஸனம் என்ற உனது சக்கரத்தால் அவன் தலையை அறுத்தாய். அவனை தீர்ண நரகனாக (மோக்ஷம் அடைந்த நரகன்) மாற்றினாயாமே!