Sriman Narayaneeyam - Dasaka 81 - மற்ற திருமணங்கள் (ச்லோகம் 832)
Dasaka 81 - மற்ற திருமணங்கள்
ஸம்ருதாயாதம் பக்ஷிப்ரவரம் அதிரூடஸ்த்வமகமோ வஹந்நங்கே பாமாமுபவநமிவ அராதி பவநம் விபிந்தன் துர்காணி த்ருடித ப்ருதநா சோணிதரஸை: புரம் தாவத் ப்ராக்ஜ்யோதிஷம் அகுருதா: சோணிதபுரம் ஸம்ருத ஆயாதம் பக்ஷி ப்ரவரம் அதிரூட: த்வம் அகம: வஹந் அங்கே பாமா உபவநம் இவ அராதி பவநம் விபிந்தன் துர்காணி த்ருடித ப்ருதநா சோணித ரஸை: புரம் தாவத் ப்ராக்ஜ்யோதிஷம் அகுருதா: சோணிதபுரம் स्मृतायातं पक्षिप्रवरमधिरूढस्त्वमगमो वहन्नङ्के भामामुपवनमिवारातिभवनम् । विभिन्दन् दुर्गाणि त्रुटितपृतनाशोनितरसैः पुरं तावत् प्राग्ज्योतिषमकुरुथाः शोणितपुरम्
குருவாயூரப்பா! நீ உடனே கருடனை நினைத்தாய். பறவைகளின் அரசனான கருடன் உடனே வந்தான். அவன் மீது ஏறி அமர்ந்தாய். ஸத்யபாமாவை உனது மடியின் மீது உட்கார வைத்துக் கொண்டாய். ஒரு நந்தவனத்திற்குச் செல்வது போன்று உற்சாகத்துடன் நரகாசுரன் இருப்பிடம் சென்றாய். அங்கு இருந்த அவனது கோட்டைகளை உடைத்தாய். அவனது படைகளை அழித்தாய். அந்தப் படைவீரர்களின் இரத்தத்தால் ஜ்யோதிஷம் என்ற பெயர் கொண்ட அந்த நகரம், சோணிதபுரம் (இரத்தம் நிறைந்த புரம்) என்றானதாமே!