Sriman Narayaneeyam - Dasaka 81 - மற்ற திருமணங்கள் (ச்லோகம் 831)

Dasaka 81 - மற்ற திருமணங்கள்

பார்த்தாத்யைரப்யக்ருத லவநம் தோய மாத்ராபிலக்ஷ்யம் லக்ஷம் சித்வா சபரமவ்ருதா லக்ஷணாம் மந்த்ரகந்யாம் அஷ்டாவேவம் தவ ஸம்பவந் வல்லபாஸ்தத்ர மத்யே சுச்ருத த்வம் ஸுரபதிகிரா பௌம துச்சேஷ்டிதாந் பார்த்த ஆத்யை: அபி அக்ருத லவநம் தோய மாத்ர அபிலக்ஷ்யம் லக்ஷம் சித்வா சபரம் அவ்ருதா லக்ஷணாம் மந்த்ரகந்யாம் அஷ்டௌ ஏவம் தவ ஸம்பவந் வல்லபா: தத்ர மத்யே சுச்ருத த்வம் ஸுரபதி கிரா பௌம துச்சேஷ்டிதாந் पार्थाद्यैरप्यकृतलवनं तोयमात्राभिलक्ष्यं लक्षं छित्वा शफरमवृथा लक्षणां मद्रकन्याम् । अष्टावेवं तव समभवन् वल्लभास्तत्र मध्ये शुश्रोथ त्वं सुरपतिगिरा भौमदुश्चेष्टितानि

குருவாயூரப்பா! மந்திர நாட்டின் அரசன், மீன் இலக்கு ஒன்றின் பிம்பத்தை நீரில் பார்த்து அம்பு எய்து அறுக்கவேண்டும் என்றும், அந்தப் போட்டியில் வெல்பவர்களுக்கே தனது மகளான லக்ஷ்மணை உரித்தாவாள் என்றும் அறிவித்தான். அந்த இலக்கு அர்ஜுனனால் கூட எட்ட இயலாது இருந்தது. நீ அதனை அறுத்து அவளை மணம் முடித்தாய். இப்படியாக நீ எட்டு மனைவிகளைக் கொண்டிருந்தாய். அப்போது உன்னிடம் இந்திரன், நரகாசுரன் என்பவனின் கொடுமைகளைக் கூறினானாமே!