Sriman Narayaneeyam - Dasaka 81 - மற்ற திருமணங்கள் (ச்லோகம் 830)

Dasaka 81 - மற்ற திருமணங்கள்

ஸத்யாம் கத்வா புநருதவஹோ நக்நஜிந்நந்தநாம் தாம் பத்வா ஸப்தாபி ச வ்ருஷவரான் ஸப்த மூர்த்திர் நிமேஷாத் பத்ராம் நாம ப்ரததுரத தே தேவ ஸந்தர்த்தநாத்யா: தத் ஸோதர்யா வரத பவத: ஸோSபி பைத்ருஷ்வஸேயீ ஸத்யாம் கத்வா புந: உதவஹ: நக்நஜித் நந்தநாம் தாம் பத்வா ஸப்த அபி ச வ்ருஷ வரான் ஸப்த மூர்த்தி: நிமேஷாத் பத்ராம் நாம ப்ரதது: அத தே தேவ ஸந்தர்த்தந ஆத்யா: தத் ஸோதர்யா வரத பவத: ஸா அபி பைத்ருஷ்வஸேயீ सत्यां गत्वा पुनरुदवहो नग्नजिन्नन्दनां तां बध्वा सप्तापि च वृषवरान् सप्तमूर्तिर्निमेषात् । भद्रां नाम प्रददुरथ ते देव सन्तर्द्दनाद्या - स्तत्सोदर्यां वरद भवतः सापि पैतृष्वसेयी

வரம் அளிப்பவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ ஒருமுறை கோசலை நாட்டிற்குச் சென்றாய். அங்கு நக்னஜித் என்ற அரசன் தனது மகளான ஸத்யாவை மணப்பதற்கான பந்தயமாக, ஏழு எருதுகளை அடக்கவேண்டும் என்ற போட்டியை வைத்தான். நீ உனது உருவத்தை ஏழு உருவங்களாக எடுத்துக் கொண்டு விரைவாக அந்த ஏழு எருதுகளை அடக்கினாய். பின்னர் அவனது மகளைத் திருமணம் முடித்தாய். கேகய நாட்டின் ஸந்தர்த்தனன் என்பவன் தனது சகோதரியான பத்ரா என்பவளை உனக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவளும் உனக்கு ஓர் அத்தை மகள் அல்லவோ?