Sriman Narayaneeyam - Dasaka 81 - மற்ற திருமணங்கள் (ச்லோகம் 829)

Dasaka 81 - மற்ற திருமணங்கள்

தத்ர க்ரீடந்நபி ச யமுநா கூல த்ருஷ்டாம் க்ருஹீத்வா தாம் காளிந்தீம் நகரமகம: காண்டவ ப்ரீணிதக்னி: ப்ராத்ரு த்ரஸ்தாம் ப்ரணய விவசாம் தேவ பைத்ருஷ்வஸேயீம் ராஜ்ஞாம் மத்யே ஸபதி ஜஹ்ருஷே மித்ரவிந்தாமவந்தீம் தத்ர க்ரீடந் அபி ச யமுநா கூல த்ருஷ்டாம் க்ருஹீத்வா தாம் காளிந்தீம் நகரம் அகம: காண்டவ ப்ரீணித அக்னி: ப்ராத்ரு த்ரஸ்தாம் ப்ரணய விவசாம் தேவ பைத்ருஷ்வஸேயீம் ராஜ்ஞாம் மத்யே ஸபதி ஜஹ்ருஷே மித்ரவிந்தாம் அவந்தீம் तत्र क्रीडन्नपि च यमुनाकूलदृष्टां गृहीत्वा तां कालिन्दीं नगरमगमः खाण्डवप्रीणिताग्निः । भ्रातृत्रस्तां प्रणयविवशां देव पैतृष्वसेयीं राज्ञां मध्ये सपदि जहृइषे मित्रविन्दामवन्तीम्

குருவாயூரப்பா! ஹஸ்தினாபுரத்தில் நீ பாண்டவர்களுடன் விளையாடி மகிழ்ந்தாய். பின்னர் காண்டவ வனத்தை அக்னிதேவனுக்கு இரையாக அளித்தாய். யமுனையின் கரையில் காளிந்தி என்பவளைக் கண்டு அவளை உனது மனைவியாக்கிக் கொண்டு துவாரகை திரும்பினாய். அவந்தி நாட்டின் அரசன் மகளும், உனது அத்தை மகளும் ஆகிய மித்ரவிந்தை என்பவள் உன் மீது காதல் கொண்டிருந்தாள். இருப்பினும் தனது சகோதரர்களுக்குப் பயந்து தனது எண்ணத்தை வெளிக்காட்டாமல் இருந்தாள். இதனால் துன்பமுற்று இருந்த அவளை, பல அரசர்கள் வீற்றிருந்த சபையில் இருந்து கவர்ந்து சென்றாயாமே!