Sriman Narayaneeyam - Dasaka 81 - மற்ற திருமணங்கள் (ச்லோகம் 828)

Dasaka 81 - மற்ற திருமணங்கள்

பத்ராம் பத்ராம் பவதவரஜாம் கௌரவேணார்த்யமாநாம் த்வத் வாசா தாமஹ்ருத குஹநா மஸ்கரீ சக்ரஸூநு: தத்ர க்ருத்தம் பலமநுநயந் ப்ரத்யகாஸ்தேந ஸார்த்தம் சக்ரப்ரஸ்தம் ப்ரிய ஸக முதே ஸத்யபாமா ஸஹாய: பத்ராம் பத்ராம் பவத் அவரஜாம் கௌரவேண அர்த்யமாநாம் த்வத் வாசா தாம் அஹ்ருத குஹநா மஸ்கரீ சக்ரஸூநு: தத்ர க்ருத்தம் பலம் அநுநயந் ப்ரத்யகா: தேந ஸார்த்தம் சக்ரப்ரஸ்தம் ப்ரிய ஸக முதே ஸத்யபாமா ஸஹாய: भद्रां भद्रां भवदवरजां कौरवेणार्थ्यमानां त्वद्वाचा तामहृत कुहनामस्करी शक्रसूनुः । तत्र क्रुद्धं बलमनुनयन् प्रत्यगास्तेन सार्धं शक्रप्रस्थं प्रियसखमुदे सत्यभामासहायः

குருவாயூரப்பா! உன்னுடைய தங்கையும், மிகுந்த அழகானவளும் ஆகிய சுபத்ரை மேல் துரியோதனன் விருப்பம் கொண்டான். ஆனால் உனது ஆலோசனைப்படி அர்ஜுனன் ஒரு துறவி போன்ற வேடம் பூண்டு வந்து அவளைக் கவர்ந்து சென்றான். இதனால் பலராமனுக்கு மிகுந்த கோபம் உண்டாகவே, அவனை நீ சமாதானம் செய்தாய். பின்னர் உனது நண்பனான அர்ஜுனன் கேட்டுக் கொண்டபடி பலராமனோடும், ஸத்யபாமாவோடும் இந்த்ரப்ரஸ்தம் சென்றாய் அல்லவா?