Sriman Narayaneeyam - Dasaka 81 - மற்ற திருமணங்கள் (ச்லோகம் 827)

Dasaka 81 - மற்ற திருமணங்கள்

ஸ்நிக்தாம் முக்தாம் ஸததமபி தாம் ஸாலயந் ஸத்யபாமாம் யாதோ பூய: ஸஹ கலு தயா யாஜ்ஞஸேநீ விவாஹம் பார்த்த ப்ரீத்யை புநநபி மநாக் ஆஸ்திதோ ஹஸ்திபுர்யாம் சக்ரப்ரஸ்தம் புரமபி விபோ ஸம்விதாயாகதோSபூ: ஸ்நிக்தாம் முக்தாம் ஸததம் அபி தாம் ஸாலயந் ஸத்யபாமாம் யாத: பூய: ஸஹ கலு தயா யாஜ்ஞஸேநீ விவாஹம் பார்த்த ப்ரீத்யை புந: அபி மநாக் ஆஸ்தித: ஹஸ்திபுர்யாம் சக்ரப்ரஸ்தம் புரம் அபி விபோ ஸம்விதா ஆகத: அபூ: स्निग्धां मुग्धां सततमपि तां लालयन् सत्यभामां यातो भूयः सह खलु तया याज्ञसेनीविवाहम् । पार्थप्रीत्यै पुनरपि मनागास्थितो हस्तिपुर्यां शक्रप्रस्थं पुरमपि विभो संविधायागतोऽभूः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் நிறைந்தவனே! உன்னிடம் மிகுந்த காதலும் அழகும் உடையவளான ஸத்யபாமாவை நீ மகிழச் செய்தாய். அவளை உடன் அழைத்துக் கொண்டு திரௌபதியின் திருமணத்திற்குச் சென்றாய். பின்னர் பாண்டவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஹஸ்தினாபுரத்தில் சில நாட்கள் தங்கினாய். அதன் பின்னர் இந்த்ரப்ரஸ்தம் என்ற ஓர் அழகான நகரத்தை பாண்டவர்களுக்காக உருவாக்கிக் கொடுத்து விட்டு துவாரகை திரும்பினாயாமே!விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-58 மற்றும் x-59 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.