Sriman Narayaneeyam - Dasaka 80 - ஸ்யமந்தக மணி (ச்லோகம் 826)
Dasaka 80 - ஸ்யமந்தக மணி
யாதம் பயேநே க்ருதவர்மயுதம் புநஸ்தம் ஆஹூய தத் விநிஹிதம் ச மணிம் ப்ரகாச்ய தத்ரைவ ஸுவ்ரததரே விநிதாய துஷ்யந் பாமா குசாந்தசயந: பவநேச பாயா: யாதம் பயேநே க்ருதவர்மயுதம் புந: தம் ஆஹூய தத் விநிஹிதம் ச மணிம் ப்ரகாச்ய தத்ர ஏவ ஸுவ்ரத தரே விநிதாய துஷ்யந் பாமா குசாந்த சயந: பவந ஈச பாயா: यातं भयेन कृतवर्मयुतं पुनस्त - माहूय तद्विनिहितं च मणिं प्रकाश्य । तत्रैव सुव्रतधरे विनिधाय तुष्यन् भामाकुचान्तरशयः पवनेश पायाः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! க்ருதவர்மனுடன் பயந்து ஓடிய அக்ரூரரை நீ அழைத்தாய். அவரிடம் சததந்வா ஸ்யமந்தக மணியைக் கொடுத்து வைத்திருந்தான் என்று அனைவரிடமும் கூறினாய். சிறந்த விரதங்கள் உடையவரான அக்ரூரரிடம் அந்த மணியை அளித்தாய். பின்னர் ஸத்யபாமாவுடன் இன்பமாக இருந்தாய் அல்லவா? இப்படிப்பட்ட நீ என்னைக் காப்பாயாக!***