Sriman Narayaneeyam - Dasaka 80 - ஸ்யமந்தக மணி (ச்லோகம் 825)

Dasaka 80 - ஸ்யமந்தக மணி

பக்தஸ்த்வயி ஸ்திரதர: ஸ ஹி காந்திநேய: தஸ்யைவ காபதமதி: கதமீச ஜாதா விஜ்ஞாநவாந் ப்ரசமவாநஹமித்யுதீர்ணம் கர்வம் த்ருவம் சமயிதும் பவதா க்ருதைவ பக்த: த்வயி ஸ்திரதர: ஸ ஹி காந்திநேய: தஸ்ய ஏவ காபத மதி: கதம் ஈச ஜாதா விஜ்ஞாநவாந் ப்ரசமவாந் அஹம் இதி உதீர்ணம் கர்வம் த்ருவம் சமயிதும் பவதா க்ருதா ஏவ भक्तस्त्वयि स्थिरतरः स हि गान्दिनेय - स्तस्यैव कापथमतिः कथमीश जाता । विज्ञानवान् प्रशमवानहमित्युदीर्णं गर्वं ध्रुवं शमयितुं भवता कृतैव

குருவாயூரப்பா! ஈசனே! அந்த அக்ரூரர் உன் மீது மிகவும் ஆழ்ந்த பக்தியையும் பணிவையும் உடையவர் அல்லவோ? அவருடைய மனதில் ஸத்ராஜித்தைக் கொல்லும் தீய எண்ணம் எப்படி உண்டானது? அவருக்கு மனதில், “நான் அனைத்தும் அறிந்தவன், அமைதியானவன்”, என்ற கர்வம் இருந்தது. அதனை அடக்கவே நீ இப்படி செய்திருக்க வேண்டும் என்பது உறுதியாகும்.