Sriman Narayaneeyam - Dasaka 80 - ஸ்யமந்தக மணி (ச்லோகம் 823)
Dasaka 80 - ஸ்யமந்தக மணி
சோகாத் குரூநுபகதாமவலோக்ய காந்தாம் ஹத்வா த்ருதம் சததநும் ஸமஹர்ஷயஸ்தாம் ரத்நே ஸசங்க இவ மைதில கேஹமேத்ய ராமோ கதாம் ஸமசிசிக்ஷத தார்த்தராஷ்ட்ரம் சோகாத் குரூந் உபகதாம் அவலோக்ய காந்தாம் ஹத்வா த்ருதம் சததநும் ஸமஹர்ஷய: தாம் ரத்நே ஸசங்க இவ மைதில கேஹம் ஏத்ய ராமோ கதாம் ஸமசிசிக்ஷத தார்த்தராஷ்ட்ரம் शोकात् कुरूनुपगतामवलोक्य कान्तां हत्वा द्रुतं शतधुनं समहर्षयस्ताम् । रत्ने सशङ्क इव मैथिलगेहमेत्य रामो गदां समशिशिक्षत धार्तराष्ट्रम्
குருவாயூரப்பா! தனது தந்தை இறந்தவுடன் மிகவும் மனவருத்தப்பட்டு உன்னைத் தேடி உனது மனைவி ஸத்யபாமா குரு நாட்டிற்கு வந்தாளாமே! நீ விரைந்து சென்று சததந்வாவைக் கொன்று அவளை மகிழ வைத்தாய். ஸ்யமந்தக மணி யாரிடம் உள்ளது என்ற சந்தேகம் மிகவும் கொண்ட பலராமன், மிதிலை நகரத்திற்குச் சென்று அங்கு துரியோதனனுக்குக் கதாயுதப் பயிற்சி அளித்தான் அல்லவா?