Sriman Narayaneeyam - Dasaka 80 - ஸ்யமந்தக மணி (ச்லோகம் 822)
Dasaka 80 - ஸ்யமந்தக மணி
வ்ரீலாகுலாம் ரமயதி த்வயி ஸத்யபாமாம் கௌந்தேய தாஹ கதயாத குரூந் ப்ரயாதே ஹீ காந்திநேய க்ருதவர்மகிரா நிபாத்ய ஸத்ராஜிதம் சததநுர் மணிமாஜஹார வ்ரீலா ஆகுலாம் ரமயதி த்வயி ஸத்யபாமாம் கௌந்தேய தாஹ கதயா அத குரூந் ப்ரயாதே ஹீ காந்திநேய க்ருதவர்ம கிரா நிபாத்ய ஸத்ராஜிதம் சததநு: மணிம் ஆஜஹார व्रीलाकुलां रमयति त्वयि सत्यभामां कौन्तेयदाहकथयाथ कुरून् प्रयाते । ही गान्दिनेयकृतवर्मगिरा निपात्य सत्राजितं शतधनुर्मणिमाजहार
குருவாயூரப்பா! நாணம் மிகுந்த ஸத்யபாமாவை மேலும் இன்பத்துடன் இருக்கும்படியாக நீ செய்து வந்தாய். அப்படிப்பட்ட ஒருநாளில் உனது அத்தையின் (குந்தி) மகன்கள் (பாண்டவர்கள்) தீயில் வெந்து மாண்டனர் என்று செய்தி வந்தது. உடனே நீ ஹஸ்தினாபுரத்திற்கு விரைந்தாய். அப்போது அக்ரூரர், க்ருதவர்மன் முதலானோர் கூறியதைக் கேட்டு சததந்வா (இவன் ஸத்யபாமாவை மணக்கத் திட்டமிட்டவன்) என்ற யாதவன் ஸத்ராஜித்தைக் கொன்று விட்டு அந்தச் ஸ்யமந்தக மணியை அபகரித்துச் சென்றானாமே!