Sriman Narayaneeyam - Dasaka 80 - ஸ்யமந்தக மணி (ச்லோகம் 821)
Dasaka 80 - ஸ்யமந்தக மணி
ததநு ஸ கலு வ்ரீலாலோலோ விலோல விலாசநாம் துஹிதரமஹோ தீமாந் பாமாம் கிரைவ பரார்ப்பிதாம் அதித மணிநா துப்யம் லப்யம் ஸமேத்ய பவாநபி ப்ரமுதித மநாஸ்தஸ்யைவாதாந் மணிம் கஹநாசய: ததநு ஸ கலு வ்ரீலா லோல: விலோல விலாசநாம் துஹிதரம் அஹோ தீமாந் பாமாம் கிரா ஏவ பர அர்ப்பிதாம் அதித மணிநா துப்யம் லப்யம் ஸமேத்ய பவாந் அபி ப்ரமுதித மநா: தஸ்ய ஏவ அதாந் மணிம் கஹந ஆசய: तदनु स खलु व्रीडालोलो विलोलविलोचनां दुहितरमहो धीमान् भामां गिरैव परार्पिताम् । अदित मणिना तुभ्यं लभ्यं समेत्य भवानपि प्रमुदितमनास्तस्यैवादान्मणीं गहनाशयः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இதனால் ஸத்ராஜித் மிகுந்த நாணம் கொண்டு அவமானப்பட்டு நின்றான். உன்னை அல்லாமல் வேறு ஒருவருக்குத்தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று எண்ணியிருந்த தனது மகள் ஸத்யபாமாவை, ஸ்யமந்தக மணியுடன் சேர்த்து உனக்குக் கொடுத்தான். நீ அந்த இரத்தினத்துடன் வந்த பொன் போன்ற ஸத்யபாமாவை மட்டும் ஏற்றுக்கொண்டு, இரத்தினத்தை அவனிடம் திருப்பிக் கொடுத்தாய் அல்லவா?