Sriman Narayaneeyam - Dasaka 80 - ஸ்யமந்தக மணி (ச்லோகம் 819)

Dasaka 80 - ஸ்யமந்தக மணி

பவந்தமவிதர்கயந்நதிவயா: ஸ்வயம் ஜாம்பவாந் முகுந்த சரணம் ஹி மாம் க: இஹ ரோத்துமித்யாலபந் விபோ ரகுபதே ஹரே ஜய ஜயேத்யலம் முஷ்டிபி: சிரம் தவ ஸமர்ச்சனம் வ்யதித பக்தசூடாமணி: பவந்தம் அவிதர்கயந் அதி வயா: ஸ்வயம் ஜாம்பவாந் முகுந்த சரணம் ஹி மாம் க: இஹ ரோத்தும் இதி ஆலபந் விபோ ரகுபதே ஹரே ஜய ஜய இதி அலம் முஷ்டிபி: சிரம் தவ ஸமர்ச்சனம் வ்யதித பக்த சூடாமணி: भवन्तमवितर्कयन्नतिवयाः स्वयं जाम्बवान् मुकुन्दशरणं हि मां क इह रोद्दुमित्यालपन् । विभो रघुपते हरे जय जयेत्यलं मुष्टिभि - श्चिरं तव समर्चनं व्यधित भक्तचूडामणिः

குருவாயூரப்பா! வயதில் முதிர்ந்தவனும் சிறந்தவனும் ஆகிய அந்த ஜாம்பவான் உன்னை யார் என்று அறியவில்லை. அவன் உன்னிடம், “முகுந்தனையே சரணம் என்று புகுந்த என்னை வெல்பவர்கள் யார்? ப்ரபோ! இராமா! இராமபத்ரா! ஸ்ரீஹரி! ஜய ஜய!”, என்று கூறிக்கொண்டே உன்னைத் தனது முட்டிகளால் குத்தினானாமே! இப்படியாகவே உனக்கு அவன் அர்ச்சனை செய்தான் (அவனை பக்தசூடாமணி என்று பட்டத்ரி கூறுவதைக் காண்க).