Sriman Narayaneeyam - Dasaka 80 - ஸ்யமந்தக மணி (ச்லோகம் 818)

Dasaka 80 - ஸ்யமந்தக மணி

சசம்ஸு: ஸத்ராஜித் கிரமநு ஜநாஸ்த்வாம் மணிஹரம் ஜநாநாம் பீயூஷம் பவதி குணிநாம் தோஷ கணிகா தத: ஸர்வஜ்ஞோSபி ஸ்வ ஜந ஸஹிதோ மார்கணபர: ப்ரஸேநம் தம் த்ருஷ்ட்வா ஹரிமபி கதோSபூ: கபிகுஹாம் சசம்ஸு: ஸத்ராஜித் கிரம் அநு ஜநா: த்வாம் மணி ஹரம் ஜநாநாம் பீயூஷம் பவதி குணிநாம் தோஷ கணிகா தத: ஸர்வஜ்ஞ: அபி ஸ்வ ஜந ஸஹித: மார்கண பர: ப்ரஸேநம் தம் த்ருஷ்ட்வா ஹரிம் அபி கத: அபூ: கபி குஹாம் शशंसुः सत्राजिद्गिरमनु जनास्त्वां मणिहरं जनानां पीयूषं भवति गुणिनां दोषकणिका । ततः सर्वज्ञोऽपि स्वजनसहितो मार्गणपरः प्रसेनं तं दृष्ट्वा हरिमपि गतोऽभूः कपिगुहाम्

குருவாயூரப்பா! அதன் பின்னர் ஸத்ராஜித் சொற்களைக் கேட்ட யாவரும், நீதான் அந்த மணியைத் திருடிவிட்டாய் என்று பேசத் தொடங்கினார்கள். நல்லவர்களைப் பற்றிய சிறு தோஷம் அனைவருக்கும் அமிர்தம் உண்டது போல் ஆகிறது போலும். நீ அனைத்தையும் உணர்ந்திருந்தாய். இருந்தபோதிலும் உனது உறவினர்களுடன் அந்த மணியைத் தேடிச் சென்றாய். அப்போது வழியில் சிங்கத்தால் கொல்லப்பட்ட ப்ரஸேனன் உடலையும், ஜாம்பவானால் கொல்லப்பட்ட சிங்கத்தின் உடலையும் கண்டாய். அதன் பின்னர் ஜாம்பவானின் குகையை அடைந்தாயாமே!