Sriman Narayaneeyam - Dasaka 80 - ஸ்யமந்தக மணி (ச்லோகம் 817)
Dasaka 80 - ஸ்யமந்தக மணி
அதத்தம் தம் துப்யம் மணி வரம் அநேநால்ப மநஸா ப்ரஸேநஸ்தத் ப்ராதா களபுவி வஹந் ப்ராப ம்ருகாயம் அஹந்நேநம் ஸிம்ஹோ மணி மஹஸி மாம்ஸ ப்ரமவசாத் கபீந்த்ரஸ்தம் ஹத்வா மணிம் அபி ச பாலாய ததிவாந் அதத்தம் தம் துப்யம் மணி வரம் அநேந அல்ப மநஸா ப்ரஸேந: தத் ப்ராதா கள புவி வஹந் ப்ராப ம்ருகாயம் அஹந் ஏநம் ஸிம்ஹ: மணி மஹஸி மாம்ஸ ப்ரம வசாத் கபீந்த்ர: தம் ஹத்வா மணிம் அபி ச பாலாய ததிவாந் अदत्तं तं तुभ्यं मणिवरमनेनाल्पमनसा प्रसेनस्तद् भ्राता गलभुवि वहन् प्राप मृगयाम् । अहन्नेनं सिंहो मणिमहसि मांसभ्रमवशात् कपीन्द्रस्तं हत्वा मणिमपि च बालाय ददिवान्
குருவாயூரப்பா! ஆனால் குறுகிய மனம் உள்ள அந்த ஸத்ராஜித் அந்த மணியை உன்னிடம் தரவில்லை. ஒருமுறை அவன் தம்பியான ப்ரஸேனன் என்பவன் அந்த மணியைத் தனது கழுத்தில் அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு சிங்கம் அந்த மணியைக் கண்டது. அது ஒரு மாமிசத்துண்டு என்று நினைத்து ப்ரஸேனனைக் கொன்றது. அதன் பின்னர் குரங்குகளின் தலைவனான ஜாம்பவான் அந்தச் சிங்கத்தைக் கொன்றான். அதனிடமிருந்த மணியைப் பறித்துத் தனது குழந்தையிடம் கொடுத்தான்.