Sriman Narayaneeyam - Dasaka 80 - ஸ்யமந்தக மணி (ச்லோகம் 816)
Dasaka 80 - ஸ்யமந்தக மணி
ஸத்ராஜிதஸ்த்வமத லுப்தவதர்க்க லப்தம் திவ்யம் ஸ்யமந்தகமணிம் பகவந்நயாசீ: தத் காரணம் பஹுவிதம் மம பாதி நூநம் தஸ்யாத்மஜாம் த்வயி ரதாம் சலதோ விவோடும் ஸத்ராஜித: த்வம் அத லுப்த வத் அர்க்க லப்தம் திவ்யம் ஸ்யமந்தக மணிம் பகவந் அயாசீ: தத் காரணம் பஹு விதம் மம பாதி நூநம் தஸ்ய ஆத்மஜாம் த்வயி ரதாம் சலத: விவோடும் सत्राजितस्त्वमथ लुब्धवदर्कलब्धं दिव्यं स्यमन्तकमणिं भगवन्नयाचीः । तत्कारणं बहुविधं मम भाति नूनं तस्यात्मजां त्वयि रतां छलतो विवोढुम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பகவானே! ஸத்ராஜித் என்ற ஒரு யாதவனுக்கு, அவன் சூரியனைக் குறித்து இயற்றிய தவத்தின் மூலமாக, ஸ்யமந்தகம் என்ற தெய்வீக சக்தி உடைய ஓர் இரத்தினக்கல் கிடைத்தது. நீ அந்தக் கல்லை அவனிடம், பேராசை உள்ளதுபோல் யாசித்தாயாமே! நீ அப்படிக் கேட்டதற்குக் காரணம் எனக்கு (பட்டத்ரி) என்ன தோன்றுகிறது என்றால் அவனுடைய மகளும் உன் மீது காதல் கொண்டிருந்தவளுமான ஸத்யபாமா என்பவளை திருமணம் செய்து கொள்ளுவதற்கு அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-56 மற்றும் x-57 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.