Sriman Narayaneeyam - Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம் (ச்லோகம் 815)

Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம்

தததிகைரத லாலந கௌசலை: ப்ரணயிநீமதிகம் ஸுகயந்நிமாம் அயி முகுந்த பவச்சரிதாநி ந: ப்ரகததாம் கத தாந்திமபாகுரு தத் அதிகை: அத லாலந கௌசலை: ப்ரணயிநீம் அதிகம் ஸுகயந் இமாம் அயி முகுந்த பவத் சரிதாநி ந: ப்ரகததாம் கத தாந்திம் அபாகுரு तदधिकैरथ लालनकौशलैः प्रणयिनीमधिकं रमयन्निमाम् । अयि मुकुन्द भवच्चरितानि नः प्रगदतां गदतान्तिमपाकुरु

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! முகுந்தா! அதன் பின்னர் ருக்மிணியை முன்பை விட அதிகமாகக் கொண்டாடிப் பேசி அவளை மகிழ்வு கொள்ளச் செய்தாய். இப்படியாக உனது அற்புதமான சரிதங்களையும் லீலைகளையும் கூறும் எங்களுக்கு, எங்கள் நோய்களால் உண்டாகும் துன்பத்தை விலக்க வேண்டும். ***