Sriman Narayaneeyam - Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம் (ச்லோகம் 814)

Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம்

விவித நர்மபிரேவமஹர்நிசம் ப்ரமதமாகலயந் புநரேகதா ருஜுமதே: கில வக்ரகிரா பவாந் வர தநோரதநோததிலோலதாம் விவித நர்மபி: ஏவம் அஹ: நிசம் ப்ரமதம் ஆகலயந் புந: ஏகதா ருஜு மதே: கில வக்ர கிரா பவாந் வர தநோ: அதநோத் அதி லோலதாம் विविधनर्मभिरेवमहर्निशं प्रमदमाकलयन् पुनरेकदा । ऋजुमतेः किल वक्रागिरा भवान् वरतनोरतनोदतिलोलताम्

குருவாயூரப்பா! இப்படியாக நீ இரவும் பகலும் உனது வேடிக்கை நிறைந்த காதல் வார்த்தைகளால் ருக்மிணியை மகிழ வைத்தாய். இப்படியிருக்கும்போது ஒருநாள் நீ கள்ளம் கபடம் அறியாத அழகான ருக்மிணியை, உனது கபடமான வார்த்தையால் நடுங்க வைத்தாய் அல்லவா? (அந்த வரிகள் பாகவதத்தில் – “ருக்மிணி! நீ அரசு இல்லாத என்னை ஏன் திருமணம் செய்து கொண்டாய். வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டிருக்கலாமே” என்பதாகும்)