Sriman Narayaneeyam - Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம் (ச்லோகம் 813)

Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம்

நவ ஸமாகம லஜ்ஜித மாநஸாம் ப்ரணய கௌதுக ஜ்ரும்பித மந்மதாம் அரமய: கலு நாத யதா ஸுகம் ரஹஸி தாம் ஹஸிதாம்சுலஸந்முகீம் நவ ஸமாகம லஜ்ஜித மாநஸாம் ப்ரணய கௌதுக ஜ்ரும்பித மந்மதாம் அரமய: கலு நாத யதா ஸுகம் ரஹஸி தாம் ஹஸித அம்சுல ஸந்முகீம் नवसमागमलज्जितमानसां प्रणयकौतुकजृम्भितमन्मथाम् । अरमयः खलु नाथ यथासुखं रहसि तां हसितांशुलसन्मुखीम्

குருவாயூரப்பா! அந்த ருக்மிணியின் முகமும் மனதும் உன்னைப் போன்றவனின் புதிய சேர்க்கையால் நாணம் கொண்டன. உன் மீது கொண்ட அன்பாலும் மகிழ்வாலும், அவளுக்குக் காமம் மேலும் வளர்ந்தது. இதனால் அவள் முகத்தில் எழிலான புன்னகை அரும்பியது. நீ அவளைத் தனிமையில் இன்பமாக இருக்கும்படி செய்தாயாமே!