Sriman Narayaneeyam - Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம் (ச்லோகம் 812)
Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம்
ததநு ருக்மிணமாகதமாஹவே வதமுபேக்ஷ்ய நிபத்ய விரூபயந் ஹ்ருதமதம் பரிமுச்ய பலோக்திபி: புரமயா ரமயா ஸஹ காந்தயா ததநு ருக்மிணம் ஆகதம் ஆஹவே வதம் உபேக்ஷ்ய நிபத்ய விரூபயந் ஹ்ருத மதம் பரிமுச்ய பல உக்திபி: புரம் அயா: ரமயா ஸஹ காந்தயா तदनु रुक्मिणमागतमाहवे वधमुपेक्ष्य निबध्य विरूपयन् । हृतमदं परिमुच्य बलोक्तिभिः पुरमया रमया सह कान्तया
குருவாயூரப்பா! அதன் பின்னர் உன்னுடன் ருக்மி யுத்தம் செய்ய வந்தான். நீ அவனைக் கட்டி வைத்து அவனது முகத்தை அழகில்லாமல் செய்தாய். அதன் பின்னர் பலராமன் கூறியதால் அவனை விடுவித்தாய். அதன் பின்னர் மஹாலக்ஷ்மியான ருக்மிணியை அழைத்துக் கொண்டு துவாரகைக்கு விரைந்தாயாமே!