Sriman Narayaneeyam - Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம் (ச்லோகம் 811)
Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம்
க்வ நு கத: பசுபால இதி க்ருதா க்ருதரணா யதுபிச்ச ஜிதா ந்ருபா: ந து பவாநுதசால்யத தைரஹோ பிசுநகை: சுநகைரிவ கேஸரீ க்வ நு கத: பசுபால இதி க்ருதா க்ருதரணா யதுபி: ச ஜிதா ந்ருபா: ந து பவாந் உத்சால்யத தை: அஹோ பிசுநகை: சுநகை: இவ கேஸரீ क्वनु गतः पशुपाल इति क्रुधा कृतरणा यदुभिश्च जिता नृपाः । न तु भवानुदचाल्यत तैरहो पिशुनकैः शुनकैरिव केसरी
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த அரசர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, “எங்கே அந்த இடையன்?”, என்று கேட்டுக்கொண்டே யாதவர்களுடன் மோதினர். ஆனால் தோற்கடிக்கப்பட்டனர். நாய்கள் கூட்டத்தைக் கண்டு கம்பீரமாக நிற்கும் சிங்கம் போன்று நீ அவர்களைப் பார்த்து அசையாமல் நின்றாயாமே!