Sriman Narayaneeyam - Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம் (ச்லோகம் 810)
Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம்
க்வநு கமிஷ்யஸி சந்த்ரமுகீதி தாம் ஸரஸமேத்ய கரேண ஹரந் க்ஷணாத் ஸமதிரோப்ய ரதம் த்வமபாஹ்ருதா புவி ததோ விததோ நிநதோ த்விஷாம் க்வநு கமிஷ்யஸி சந்த்ரமுகீ இதி தாம் ஸரஸம் ஏத்ய கரேண ஹரந் க்ஷணாத் ஸமதிரோப்ய ரதம் த்வம் அபாஹ்ருதா புவி தத: விதத: நிநத: த்விஷாம் क्व तु गमिष्यसि चन्द्रमुखीति तां सरसमेत्य करेण हरन् क्षणात् । समधिरोप्य रथं त्वमपाहृथा भुवि ततो विततो निनदो द्विषाम्
குருவாயூரப்பா! நீ அவள் அருகில் சென்று, “சந்திரனைப் போன்ற அழகிய முகம் படைத்தவளே! எங்கு செல்கிறாய்?”, என்று அன்புடன் கேட்டாய். விரைந்து அவள் கைகளைப் பிடித்தாய். ஒரு நொடிப்பொழுதில் அவளைத் தூக்கி உனது தேரில் அமர வைத்தாய். பின்னர் அங்கிருந்து விரைவாகச் சென்று விட்டாய். இதனால் எழுந்த பகை அரசர்களின் கூச்சல் உலகம் எங்கும் கேட்டது.