Sriman Narayaneeyam - Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம் (ச்லோகம் 808)

Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம்

ஸமவலோக குதூஹல ஸங்குலே ந்ருப குலே நிப்ருதம் த்வயி ச ஸ்திதே ந்ருப ஸுதா நிரகாத் கிரிஜாலயாத் ஸுருசிரம் ருசிரஞ்ஜித திங்முகா ஸமவலோக குதூஹல ஸங்குலே ந்ருப குலே நிப்ருதம் த்வயி ச ஸ்திதே ந்ருப ஸுதா நிரகாத் கிரிஜா ஆலயாத் ஸுருசிரம் ருசிர ரஞ்ஜித திக் முகா समवलोक कुतुहलसङ्कुले नृपकुले निभृतं त्वयि च स्थिते । नृपसुता निरगात् ग्रिजालयात् सुरुचिरं रुचिरञ्जितदिङ्मुखा

குருவாயூரப்பா! கோயிலில் இருந்து வெளியே வரப்போகும் ருக்மிணியைக் காண மிகவும் ஆவலுடன் மகிழ்வுடன் அரசர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். நீ அந்தக் கூட்டத்தில் சேராமல் தனியாக நின்றிருந்தாய். அந்த நேரத்தில் ருக்மிணி தனது உடலில் உள்ள ஒளியால் அனைத்து திசைகளும் ப்ரகாசிக்கும்படியாக கோயிலில் இருந்து வெளியில் வந்தாள்.