Sriman Narayaneeyam - Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம் (ச்லோகம் 806)

Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம்

ததநு வந்திதுமிந்துமுகீ சிவாம் விஹித மங்கள பூஷண பாஸுரா நிரகமத் பவதர்ப்பித ஜீவிதா ஸ்வபுரத: புரத: ஸுபடாவ்ருதா ததநு வந்திதும் இந்துமுகீ சிவாம் விஹித மங்கள பூஷண பாஸுரா நிரகமத் பவத் அர்ப்பித ஜீவிதா ஸ்வபுரத: புரத: ஸுபட ஆவ்ருதா तदनु वन्दितुमिन्दुमुखी शिवां विहितमङ्गलभूषणभासुरा । निरगमद्भवदर्पितजीविता स्वपुरतः पुरतः सुभटावृता

குருவாயூரப்பா! மறுநாள் காலை விடிந்தது. அப்போது உன்னிடம் தனது உயிரையே வைத்திருந்தவளும், சந்திரன் போன்று அழகான முகம் உடையவளும் ஆகிய ருக்மிணி, தனது காவலர்கள் சூழ, அனைத்து மங்கலங்களையும் அளிக்கும் பார்வதியின் கோயிலுக்குச் சென்றாள்.