Sriman Narayaneeyam - Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம் (ச்லோகம் 805)

Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம்

புவந காந்தமவேக்ஷ்ய பவத் வபு: ந்ருப ஸுதஸ்ய நிசம்ய ச சேஷ்டிதம் விபுல கேத ஜுஷாம் புர வாஸிநாம் ஸருதிதைருதிதைரகமந்நிசா புவந காந்தம் அவேக்ஷ்ய பவத் வபு: ந்ருப ஸுதஸ்ய நிசம்ய ச சேஷ்டிதம் விபுல கேத ஜுஷாம் புர வாஸிநாம் ஸருதிதை: உதிதை: அகமத் நிசா भुवनकान्तमवेक्ष्य भवद्वपुर्नृपसुतस्य निशम्य च चेष्टितम् । विपुलखेदजुषां पुरवासिनां सरुदितैरुदितैरगमन्निशाम्

குருவாயூரப்பா! அந்த நகரத்து மக்கள் உனது அழகான திருமேனியைப் பார்த்து வியந்தனர். இப்படிப்பட்ட உன்னை விடுத்து ருக்மிணியைச் சிசுபாலனுக்குத் திருமணம் செய்து கொடுக்க எண்ணும் ருக்மியின் செயலைக் கேட்டு வருத்தம் கொண்டனர். இப்படியாக அந்த இரவு கழிந்தது.