Sriman Narayaneeyam - Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம் (ச்லோகம் 804)
Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம்
பல ஸமேத பலாநுகதோ பவாந் புரமகாஹத பீஷ்மக மாநித: த்விஜ ஸுதம் த்வதுபாகம வாதிநம் த்ருத ரஸா தரஸா ப்ரணநாம ஸா பல ஸமேத பல அநுகத: பவாந் புரம் அகாஹத பீஷ்மக மாநித: த்விஜ ஸுதம் த்வத் உபாகம வாதிநம் த்ருத ரஸா தரஸா ப்ரணநாமஸா बलसमेतबलानुगतो भवान् पुरमगाहत भीष्मकमानितः । द्विजसुतं त्वदुपागमवादिनं धृतरसा तरसा प्रणनाम सा
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னைப் பின் தொடர்ந்து பலராமன் தனது படைகளுடன் வந்தான். நீ குண்டினபுரத்தை அடைந்தபோது பீஷ்மக அரசன் உன்னை வரவேற்றான் (பீஷ்மகன் ருக்மிணியின் தந்தை ஆவான்). உன்னிடம் தூதனாக வந்த அந்தணன், ருக்மிணியிடம் உன்னுடைய வருகையைக் கூறினான். அவள் மிகவும் மகிழ்ந்து அவனைத் துதித்தாள்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-53-20 முதல் x-54 முடிய மற்றும் அத்யாயம் 60 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.