Sriman Narayaneeyam - Dasaka 78 - பலராமனின் கல்யாணம் (ச்லோகம் 801)

Dasaka 78 - பலராமனின் கல்யாணம்

அசரணாம் யதி மாம் த்வமுபேக்ஷஸே ஸபதி ஜீவிதமேவ ஜஹாம்யஹம் இதி கிரா ஸுதநோரதநோத் ப்ருசம் ஸுஹ்ருதயம் ஹ்ருதயம் தவ காதரம் அசரணாம் யதி மாம் த்வம் உபேக்ஷஸே ஸபதி ஜீவிதம் ஏவ ஜஹாமி அஹம் இதி கிரா ஸுதநோ: அதநோத் ப்ருசம் ஸுஹ்ருதயம் ஹ்ருதயம் தவ காதரம் अशरणां यदि मां त्वमुपेक्षसे सपदि जीवितमेव जहाम्यहम् । इति गिरा सुतनोरतनोद्भृशं सुहृदयं हृदयं तव कातरम्

குருவாயூரப்பா! அவன் மேலும் உன்னிடம் (ருக்மிணி கூறியதாக), “நான் இப்போது என்னைக் காப்பாற்ற யாரும் இல்லாமல் உள்ளேன். நீ என்னை கைவிட்டால் எனது உயிரை மாய்த்துக் கொள்ளவதைத் தவிர வேறு வழியில்லை”, என்று கூறினான். இதனைக் கேட்டு உனது மனம் துன்பம் கொண்டதாமே!