Sriman Narayaneeyam - Dasaka 78 - பலராமனின் கல்யாணம் (ச்லோகம் 800)
Dasaka 78 - பலராமனின் கல்யாணம்
தவ ஹ்ருதாSஸ்மி புரைவ குணைரஹம் ஹரதி மாம் கில சேதி ந்ருபோSதுநா அயி க்ருபாலய பாலய மாமிதி ப்ரஜகதே ஜகதேகபதே தயா தவ ஹ்ருதா அஸ்மி புரா ஏவ குணை: அஹம் ஹரதி மாம் கில சேதி ந்ருப: அதுநா அயி க்ருபா ஆலய பாலய மாம் இதி ப்ரஜகதே ஜகத் ஏக பதே தயா तव हृतास्मि पुरैव गुणैरहं हरति मां किल चेदिनृपोऽधुना । अयि कृपालय पालय मामिति प्रजगदे जगदेकपते तया
குருவாயூரப்பா! அந்த அந்தணன் உன்னிடம் மேலும், “அவள் உன்னிடம் இவ்வாறு கூறச் சொன்னாள்: கருணாமூர்த்தியே! க்ருஷ்ணா! உலகின் நாதனே! உன்னைப் பற்றிய விவரங்களையும், உனது திருக்கல்யாண குணங்களையும் நான் கேள்விப்பட்டேன். அதனால் வெகுவாகக் கவரப்பட்டேன். ஆனால் என்னை சிசுபாலன் மணந்து கொள்ளப்போகிறான். ஆகவே என்னை நீதான் காப்பாற்ற வேண்டும்”, என்று கூறினானாமே!