Sriman Narayaneeyam - Dasaka 78 - பலராமனின் கல்யாணம் (ச்லோகம் 799)

Dasaka 78 - பலராமனின் கல்யாணம்

ஸ ச பவந்தமவோசத குண்டிநே ந்ருப ஸுதா கலு ராஜதி ருக்மிணீ த்வயி ஸமுத்ஸுகயா நிஜ தீரதா ரஹிதயா ஹி தயா ப்ரஹிதோSஸ்ம்யஹம் ஸ ச பவந்தம் அவோசத குண்டிநே ந்ருப ஸுதா கலு ராஜதி ருக்மிணீ த்வயி ஸமுத்ஸுகயா நிஜ தீரதா ரஹிதயா ஹி தயா ப்ரஹித: அஸ்மி அஹம் स च भवन्तमवोचत कुण्डिने नृपसुता खलु राजति रुक्मिणी । त्वयि समुत्सुकया निजधीरतारहितया हि तया प्रहितोऽस्म्यहम्

குருவாயூரப்பா! அந்தப் ப்ராம்மணன் உன்னிடம், “குண்டினபுரம் என்ற நாட்டின் அழகான இளவரசியாக ருக்மிணி என்பவள் உள்ளாள் அல்லவா? அந்தப் பெண் உன் மீது காதல் கொண்டுள்ளாள். உன்னிடம் வெளிப்படுத்த துணிவு இல்லாத காரணத்தால், என்னைத் தூதுவனாக இப்போது அனுப்பினாள்”, என்றான்.