Sriman Narayaneeyam - Dasaka 78 - பலராமனின் கல்யாணம் (ச்லோகம் 798)

Dasaka 78 - பலராமனின் கல்யாணம்

த்விஜ ஸுதோSபி ச தூர்ணமுபாயயௌ தவ புரம் ஹி துராச துராஸதம் முதபவாப ச ஸாதர பூஜித: ஸ பவதா பவ தாப ஹ்ருதா ஸ்வயம் த்விஜ ஸுத: அபி ச தூர்ணம் உபாயயௌ தவ புரம் ஹி துராச துராஸதம் முதம் அவாப ச ஸாதர பூஜித: ஸ பவதா பவ தாப ஹ்ருதா ஸ்வயம் द्विजसुतोऽपि च तूर्णमुपाययौ तव पुरं हि दुराशदुरासदम् । मुदमवाप च सादरपूजितः स भवता भवतापहृता स्वयम्

குருவாயூரப்பா! தீய எண்ணம் உடையவர்களால் நெருங்க முடியாத உனது நகரத்திற்குள் அந்தப் ப்ராமணன் வந்து சேர்ந்தான். பிறவிப் பயன் காரணமாக உண்டாகும் துன்பங்களை நீக்கும் நீ, அவனை மிகழ்வுடன் வரவேற்றாய் அல்லவா?