Sriman Narayaneeyam - Dasaka 78 - பலராமனின் கல்யாணம் (ச்லோகம் 797)

Dasaka 78 - பலராமனின் கல்யாணம்

சிர த்ருத ப்ரணயா த்வயி பாலிகா ஸபதி காங்க்ஷித பங்க ஸமாகுலா தவ நிவேதயிதும் த்விஜமாதிசத் ஸ்வ கதநம் கதநங்க விநிர்மிதம் சிர த்ருத ப்ரணயா த்வயி பாலிகா ஸபதி காங்க்ஷித பங்க ஸமாகுலா தவ நிவேதயிதும் த்விஜம் ஆதிசத் ஸ்வ கதநம் கதநங்க விநிர்மிதம் चिरधृतप्रणया त्वयि बालिका सपदि काङ्क्षितभङ्गसमाकुला । तव निवेदयितुं द्विजमादिशत् स्वकदनं कदनङ्गविनिर्मितम्

குருவாயூரப்பா! அந்தப் பெண் உன் மீது பல நாட்களாகக் காதல் கொண்டிருந்தாள். தனது காதலுக்கு (சகோதரன் மூலம்) தடை உண்டாவதைக் கண்டு மனம் வருந்தினாள். கருணை என்பதே இல்லாத காமன், தனக்கு உண்டாக்கிய துன்பத்தை உனக்குத் தெரிவிக்க விருப்பம் கொண்டாள். எனவே ஓர் அந்தணனை உன்னிடம் தூதுவனாக அனுப்பினாள்.