Sriman Narayaneeyam - Dasaka 78 - பலராமனின் கல்யாணம் (ச்லோகம் 796)
Dasaka 78 - பலராமனின் கல்யாணம்
அத விதர்ப்ப ஸுதாம் கலு ருக்மிணீம் ப்ரணயிநீம் த்வயி தேவ ஸஹோதர: ஸ்வயமதித்ஸத சேதி மஹீபுஜே ஸ்வதமஸா தமஸாதுமுபாச்ரயந் அத விதர்ப்ப ஸுதாம் கலு ருக்மிணீம் ப்ரணயிநீம் த்வயி தேவ ஸஹோதர: ஸ்வயம் அதித்ஸத சேதி மஹீபுஜே ஸ்வ தமஸா தம் அஸாதும் உபாச்ரயந் अथ विदर्भसुतां खलु रुक्मिणीं प्रणयिनीं त्वयि देव सहोदरः । स्वयमदित्सत चेदिमहीभुजे स्वतमसा तमसाधुमुपाश्रयन्
குருவாயூரப்பா! விதர்ப்ப தேசத்தின் அரசன் மகளான ருக்மிணி என்பவள் உன் மீது மிகுந்த காதல் கொண்டிருந்தாள். அவளுடைய சகோதரனான ருக்மி என்பவன் தனது தீய குணங்களால், மிகவும் துஷ்டனான சேதி நாட்டு மன்னன் சிசுபாலனிடம் நட்பு கொண்டிருந்தான். சிசுபாலனுக்கு ருக்மிணியைத் திருமணம் செய்யவும் விருப்பம் கொண்டான்.