Sriman Narayaneeyam - Dasaka 78 - பலராமனின் கல்யாணம் (ச்லோகம் 795)
Dasaka 78 - பலராமனின் கல்யாணம்
ததுஷி ரேவத பூப்ருதி ரேவதீம் ஹல ப்ருதே தநயாம் விதி சாஸநாத் மஹிதமுத்ஸவ கோஷமபூபுஷ: ஸமுதிதைர்முதிதை: ஸஹ யாதவை: ததுஷி ரேவத பூப்ருதி ரேவதீம் ஹலப்ருதே தநயாம் விதி சாஸநாத் மஹிதம் உத்ஸவ கோஷம் அபூபுஷ: ஸமுதிதை: முதிதை: ஸஹ யாதவை: ददुषि रेवतभूभृति रेवतीं हलभृते तनयां विधिशासनात् । महितमुत्सवघोषमपूपुषः समुदितैर्मुदितैः सह यादवैः
குருவாயூரப்பா! நான்முகன் தனக்கு இட்ட கட்டளையின்படி ரேவதன் என்ற அரசன் தனது மகளான ரேவதியைப் பலராமனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அப்போது நீயும் யாதவர்களும் ஒன்றாகக் கூடி நின்று அந்தத் திருக்கல்யாணத்தை உத்ஸவமாகவே கொண்டாடினீர்கள் அல்லவா?